தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது..
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர்.
நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4672 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37376-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 5074 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40592-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4676 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37408-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 272 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5078 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40624 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் ரூ. 100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 62.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 62,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.