நாட்டின் முன்னணி நிறுவனங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழும நிறுவனங்கள், சர்வதேச அளவில் எதிர்கால தேவையாக உள்ள புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் பெரியளவில் முதலீடு செய்ய உள்ளதாக கடந்த ஆண்டே அறிவித்தன.
இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்களுக்கும் போட்டியாக டாடாவும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் உலகின் மிக முக்கிய தேவையாக இருக்கும் புதுபிக்கதக்க ஆற்றல் துறையில், முதலீடு செய்தால் நல்ல வளர்ச்சியினை காண முடியும் என ஏற்கனவே அதற்கான பணிகளை தொடங்கி விட்டன.
வருமான வரித்துறை கிடுக்குப் பிடியில் சிக்கிய ஹூவாய்.. ரூ.750 கோடி எங்கே..?!
புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் முதலீடு
இப்படி ஒரு நிலையில் தான் டாடா பவர் நிறுவனம் தனது சந்தை பங்கினை மேம்படுத்தவும், தங்களது வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளவும் டாடா பவர் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தான் அடுத்த 5 ஆண்டுகளில் புதுபிக்கதக்க ஆற்றல் துறையில், 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 30 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரம்?
தற்போதைய நிலவரப்படி டாடா பவர் 13.5 ஜிகாவாட் மின் உற்பத்தியினை செய்து வருகின்றது. புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் தற்போதைய நிலவரப்படி 34% பங்கினை வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் விர்சுவல் ஆக நடைபெற்ற நிலையில், டாடா பவரின் தலைவர் என் சந்திரசேகரன், 30ஜிகாவாட் ஆக உற்பத்தியினை அதிகரிக்க இலக்காக டாடா வைத்துள்ளது.
இலக்கு
2027ம் நிதியாண்டிற்குள் நிறுவனம் மின் உற்பத்தியினை 30 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 13.5 ஜிகாவாட் ஆக உள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 2027ல் 60% ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதே 2030ல் 80% ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
வலுவான ஆர்டர்கள்
டாடா பவர் 2022ல் 707 மெகாவாட் புதுபிக்கதக்க ஆற்றல் திறனை சேர்த்தது. நிறுவனம் தொடர்ந்து 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான வலுவான ஆர்டர்களை கொண்டுள்ளது.
மேலும் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் 4 ஜிகாவார் சோலார் செல்களை தமிழகத்தில் அமைக்கவுள்ளதாகவும் சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
Tata power plans to invest Rs.75,000 crore in renewable energy in next 5 years: Chandrasekaran.N
Tata power plans to invest Rs.75,000 crore in renewable energy in next 5 years: Chandrasekaran/Nஅம்பானி, அதானிக்கு போட்டியாக களமிறங்கும் டாடா.. இனி ஆட்டம் வேற லெவல்!