கேரளாவில் நலிந்தவர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் வருகிற 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு சிபிஐ நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, தங்கக்கடத்தல் உள்பட 3 வழக்குகளில் ஸ்வப்னா சுரேஷிடம் கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், தாம் உண்மையை வெளியே கொண்டுவர முயற்சிப்பதால் தம்மீது சதி வழக்குகளை பின்னி முதலமைச்சர் பினராயி விஜயன் துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.