ஆவினங்குடி பள்ளி மாணவியை சக மாணவர்கள் 4பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று ஆவினன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விடுமுறையால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதையடுத்து ஆவினன்குடி பகுதியில் உள்ள கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM