மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.!

மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன்(60). இவருடைய இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் கார்த்திகேயன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மது அருந்துவதற்காக மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் தர மறுத்ததால், மனவேதனையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் 200 ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் மது வாங்கி பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

இதை அறிந்த மனைவி மற்றும் மகள்கள் இருவரும் உடனடியாக கார்த்திகேயனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கார்த்திகேயன் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வளவனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.