100 பேர் திடீர் பணிநீக்கம்.. டிவிட்டர் ஊழியர்கள் கதறல்.. எலான் மஸ்க் செய்த வினையா..?

உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் அச்சத்தைக் கணக்கு காட்டி பணம் பலம் கொண்ட பெரு நிறுவனங்களே ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இதில் டிவிட்டர் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..?

அமெரிக்கச் சந்தையில் முதலாவது பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி டெஸ்லா ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்த மெட்டா, உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கத்தையும், புதிய பணியாளர்களைத் தேர்வு செய்வதையும் நிறுத்தியுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது டிவிட்டர் நிறுவனமும் சேர்ந்துள்ளது, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ் கைப்பற்றுவதற்கு முன்பாகவே டிவிட்டர் நிறுவனத்தில் பணிநீக்கம் என்பது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உயரும் கிரிப்டோகரன்சி.. என்ன ஆச்சு பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனம் தனது நிர்வாகத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த பல முக்கியமான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தற்போது செலவுகளைக் குறைக்கும் பணிகளையும் முக்கியமானதாகக் கையில் எடுத்துள்ளது.

ஹெச்ஆர் அணி

ஹெச்ஆர் அணி

இதன் ஒரு பகுதியாக டிவிட்டர் தனது Talent Acquisition அணி-யில் அதாவது ஹெச்ஆர் அணியில் சுமார் 30 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. செலவுகளைக் குறைக்க ஏற்கனவே புதிய ஊழியர்களைச் சேர்வு செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது.

100 பேர் பணிநீக்கம்

100 பேர் பணிநீக்கம்

இதன் வாயிலாக ஹெச்ஆர் அணிக்கு வேலை குறைந்துள்ள காரணத்தால் சுமார் 100க்கும் அதிகமாக ஊழியர்களை இந்த 30 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் வெளியேற்றியுள்ளது என டிவிட்டரும் உறுதி செய்துள்ளது.

பார்க் அகர்வால் நிர்வாகம்
 

பார்க் அகர்வால் நிர்வாகம்

 

சமீபத்தில் கூட எலான் மஸ்க் டிவிட்டர் ஆரோக்கியமாகவும், வலிமையாக மாற வேண்டும் என்று பணிநீக்கத்தைக் குறிப்பிட்டுப் பேசினார் பேசினார். இதைத் தொடர்ந்து வந்த பொருளாதார மந்த நிலை அச்சம், தற்போது பார்க் அகர்வால் தலைமையிலான நிர்வாகம் 100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. எலான் மஸ்க் வருவதற்கு முன்பே இப்படியா என டிவிட்டர் ஊழியர்கள் முணுமுணுக்கத் துவங்கியுள்ளனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகளவில் சமுக வலைத்தளத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மக்களுக்குச் சுதந்திரமாகப் பேச உரிமை இல்லையென எனக் கூறி வரும் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி அதன் மூலம் மக்கள் சமுக வலைத்தளத்தில் சுதந்திரமாகப் பேச வாய்ப்பு அளக்க உள்ளதாக அறிவித்து டிவிட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக இருப்பதாக அறிவித்தார் எலான் மஸ்க்.

போலி கணக்குகள் தரவுகள்

போலி கணக்குகள் தரவுகள்

எலான் மஸ்க்-ன் இந்த முடிவுக்கு டிவிட்டர் நிறுவனத்திலும் சரி, வெளியிலும் சரி கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டரில் எத்தனை போலி கணக்குகள் இருக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கேட்டு வரும் நிலையில் இதற்குச் சற்றும் டிவிட்டர் நிர்வாகம் பதில் அளிக்காமலேயே உள்ளதால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றும் திட்டம் பாதிலேயே நிற்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter sacked over 100 employees suddenly; Is this elon musk decision

Twitter sacked over 100 employees suddenly; Is this elon musk decision 100 பேர் திடீர் பணிநீக்கம்.. டிவிட்டர் ஊழியர்கள் கதறல்.. எலான் மஸ்க் செய்த வினையா..?

Story first published: Friday, July 8, 2022, 13:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.