மூன்று தலைமுறைகள் – குடும்பத்துடன் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டதால் மூன்று தலைமுறைகளை கடந்து மூதாட்டி தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மறந்து தற்போதைய இளைஞர்கள் துரித உணவை உட்கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் உயிர் இழக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (101). இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் ஒன்பது பேரக்குழந்தைகளும் ஏழு கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உட்கொண்டு தன்னுடைய வேலைகளை தானே செய்து நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் தனது 101-வது பிறந்த நாளை மகன்கள், மகள் பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேர குழந்தைகளுடன் கொண்டாடினார்.
image
மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது மகன்கள் மேடை அமைத்து நாதஸ்வரம் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பூஜிக்கப்பட்ட நீரை 60 மற்றும் 80 வயதை கடந்தவர்கள் அவரது காலில் ஊற்றி ஆசீர்வாதம் பெற்றார்கள் மேலும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்து 101 வந்து பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார்கள். வந்திருந்த அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.
image
இது குறித்து அவரது மகன் கூறும்போது தன்னுடைய தாய் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு இன்று வரை தன்னுடைய வேலைகளை தானே பார்த்துக் கொள்கிறார். குறிப்பாக அவித்த உணவுகளை மட்டுமே விரும்பி உண்பார் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவரது பேரன் கூறுகையில்… தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடும் எனது அப்பத்தா, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்வார். அதேபோல் எங்களிடம் அளவுக்கதிகமான அன்பை செலுத்துவார் என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.