திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் மற்றும் ஒரு வாலிபருடன் இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
இதைப் பார்த்த மணிகண்டன், அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய இரண்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.