இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள கியோட்டோவிற்கு அருகில் அமைந்துள்ள நாராவில் பிரச்சார உரையின் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மார்பில் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.
Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been confirmed dead. He was reportedly shot during a speech on Friday in the city of Nara, near Kyoto: Japan’s NHK WORLD News pic.twitter.com/7ayJpNCw17
— ANI (@ANI) July 8, 2022
முன்னதாக, இன்று காலை உள்ளூர் நேரம் 11:30 அளவில் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்தும்போது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. முன்னாள் ஜப்பான் பிரதமர் சுயநினைவில் இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கியோடோ நியூஸ் தெரிவித்தது. தற்போது அவர் உயிர் இழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR