வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் கன மழை கொட்டியது. தண்டவாளம் மீது சுவர் இடிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் தானே மாவட்டத்தில் நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. சில இடங்களில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மும்பையில் 8.2 செ.மீ., கிழக்கில் 10.9 செ.மீ., மற்றும் மேற்கில் 10.6 செ.மீ., மழை கொட்டியுள்ளது.மஸ்ஜித் – சந்துருஸ்ட் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் மிகக்குறைவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.அந்தேரி சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. மாநகராட்சி மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மும்பைக்கு குடிநீர் தரும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை காரணமாக நீர்மட்டம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
முதல்வர் வீட்டருகே வெள்ளம்
தானே மாநகராட்சி லுாயிஸ்வாடி பகுதியில் மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வீட்டருகே வெள்ளம் சூழ்ந்திருந்தது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மழை நீர் கால்வாயில் அடைப்பை நீக்கி வெள்ளத்தை வடியச் செய்தனர். தானேவை அடுத்த பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹனுவில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement