துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!

டோக்கியோ: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை அந்நாட்டு ஊடகமான NHK WORLD News தெரிவித்து உள்ளது. மேலும் அதிகாரிகளும் ShinzoAbe இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அபேவை சுட்டுவிட்டு தப்ப முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜப்பானின் நாரா நகரில் சாலையோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பின்னல் இருந்த நபரால் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார். ஜப்பானில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாடாளுமன்றத் தேர்லையொட்டி, கியோட்டோவிற்கு அருகிலுள்ள நாரா நகரில் வெள்ளிக்கிழமை  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது அரசியல் கட்சியின் முக்கிய நபர் ஒருவர் தெரிவித்தார்.

அதுபோல, சம்பவ இடத்தில் இருந்த  பிரபல ஊடகமான NHK-ன் ஒளிபரப்பாளரும் கியோடோ செய்தி நிறுவனமும்  அபேயின் மரணத்தை அறிவித்தன, 67 வயதான அவர் மார்பிலும் கழுத்திலும் சுடப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்துவிட்டதாக அறிவித்து உள்ளன.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் #ShinzoAbe இறந்துவிட்டதாக அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

அபேவை சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடிய நபரை ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று விரட்டிப் பிடித்தனர். அவர் உபயோகப்படுத்திய துப்பாக்கி, அரே தயாரித்தது என்பதும், அந்த நபர் பெயர் யமகாமி டெட்சுயா (வயது 40) நாராவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபேவின் மரணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மக்களிடையே  பேசிய பிரதமமந்திரி ஃபுமியோ கிஷிடா துப்பாக்கிச் சூட்டை “வலுவான வார்த்தைகளில்” கண்டித்தார், “இந்தத் தாக்குதல் தேர்தலின் போது நடந்த மிருகத்தனமான செயல் – நமது ஜனநாயகத்தின் அடித்தளம் – முற்றிலும் மன்னிக்க முடியாதது என ஆவேசமாக கூறினார்.

1930 களில் போருக்கு பிறகு, முன்னாள் ஜப்பானிய பிரதமரின் முதல் படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.