காபூல் விமான நிலையத்தின் செயல்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்று நடத்தத் தாலிபான்களுடன் உடன்பாடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாற்புறமும் நில எல்லையைக் கொண்ட ஆப்கானிஸ்தானின் வான்வழித் தொடர்புக்குக் காபூல் விமான நிலையம் முதன்மையாக விளங்குகிறது. அதைச் சீரமைத்துச் செயல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் தாலிபான்களுடன் பேச்சு நடத்தி வந்தன.
பலசுற்றுப் பேச்சுக்களுக்குப் பின், காபூல் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயல்பாடுகளை நடத்தும் பொறுப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வழங்கத் தாலிபான்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.