உங்கள் குழந்தையின், உயரத்தைப் பற்றி நிங்கள் கவலைக்கொள்கிறீர்களா? ஆனால் உயர்த்தை அதிகப்படுத்துவதைக் காட்டிலும் இருக்கும் உயரத்தை தக்க வைக்க வேண்டும். இது கேட்பதற்கு பொருந்தாமல் இருந்தாலும், இதுதான் உண்மை. இந்நிலையில், நாம் சில உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால், அவர்கள் உயரம் அதிகமாகும்.
கால்சியம், வைட்டமின் டி, மெக்னீஷியம், பாஸ்பரஸ் உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஆரோக்கியமான எலும்புகள் வளரவும், தசைகள் உருவாகவும் உதவுகிறது.
தயிர்
இதில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. சிறு வயதில் எலும்புகள் நன்றாக வளர தயிர் உதவி செய்கிறது. ப்ரோபயாட்டிக்கை எடுத்துகொள்வதால் உயரம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பீன்ஸ்
இதில் புரத சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் பி ஆகியவை இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, ரத்த அனுக்கள் பெருகவும், தசைகளை வளர்க்கவும் உதவுகிறது. இதில் நார்சத்து, மெக்னீஷியம், காப்பர், மான்கனிஸ், சிங்க் இருப்பதால் உயரம் அதிகரிக்க உதவுகிறது.
முட்டை
ஒரு முட்டையில் 6 கிராம் புரசத்து இருப்பதால், இது எலும்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கால்சியம் சத்தை உடல் ஏற்றுக்கொள்ள முட்டை உதவி செய்வதால், உயரம் அதிகரிக்கிறது.