மஹிந்திரா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. டாடா -வுக்கு வேர்க்க ஆரம்பித்தது..!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் இரு நிறுவனங்கள் மட்டுமே EV உற்பத்தியில் இறங்காமல் உள்ளது.

ஒன்று மாருதி சுசூகி மற்றொன்று இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கென அடித்தளமிட்ட முதல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இத்துறையில் பெரிய அளவில் வளராமலேயே உள்ளது.

இதேவேளையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடந்த 3 வருடத்தில் அறிமுகம் செய்த அனைத்து பெட்ரோல், டீசல் காரகளும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டுக் கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் (டெக் வசதிகள்) மஹிந்திரா தனது கார்களில் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனது கவனத்தை எலக்ட்ரிக் வாகனங்கள் மீது முழுமையாகத் திருப்பியுள்ளது, இதற்கான முதல் படியே படு பயங்கரமாக வைத்துள்ளது.

ரூ.30 கோடி ஸ்வாகா… ஏமாந்த 600 வொர்க் ப்ரம் ஹோம் பணியாளர்கள்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனத்திற்குத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ள நிலையில் இத்துறைக்காகப் பிரத்தியேகமாகத் தனி நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன நிறுவனம்

எலக்ட்ரிக் வாகன நிறுவனம்

இந்தப் புதிய எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தைத் துவங்கவும், அதன் மூலம் உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றைச் செய்ய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்து தற்போது பிரிட்டிஷ் இண்டர்நேஷ்னல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சுமார் 1,925 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

70,070 கோடி ரூபாய் மதிப்பீடு
 

70,070 கோடி ரூபாய் மதிப்பீடு

இப்புதிய முதலீட்டின் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மதிப்பு 9.1 பில்லியன் டாலர் அதாவது 70,070 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டை உறுதி செய்யும் வகையில் இருந்து தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தற்போது முன்னோடியாக இருக்கும் நிலையில், மஹிந்திரா-வின் வருகை பெரும் போட்டியை உருவாக்கும். இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இந்த 1925 கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 70000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலேயே திரட்டியுள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.

8000 கோடி ரூபாய் முதலீடு

8000 கோடி ரூபாய் முதலீடு

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகன பிரிவில் சுமார் 8000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mahindra & Mahindra raised Rs 1925 cr fund for new EV subsidiary; Tata motors feels the pressure

Mahindra & Mahindra raised Rs 1925 cr fund for new EV subsidiary; Tata motors feels the pressure மஹிந்திரா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. டாடா -வுக்கு வேர்க்க ஆரம்பித்தது.

Story first published: Friday, July 8, 2022, 15:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.