அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?


அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த சாப்பிட்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் என்று கருதப்படுகி்ன்றது.

ஏனென்றால், நமது உடலால் அதன் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே தினசரி சுமார் 2 அல்லது 3 உலர்ந்த அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இவற்றை நீங்கள் காலையில் உட்கொள்ளலாம்.
அந்தவகையில் தற்போது அத்திப்பழத்தை  தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா? | Benefits Of Eating Figs Soaked In Water

  • இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • மார்பக புற்று நோய் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வளர்ச்சிக்ககு காரணமான காரணிகளை அழிக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.
  • அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • இருமல் மற்றம் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • உழர்ந்த அத்திப்பழத்தில் நம் கண்களுக்குத் தேவையான விட்டமின் ஏ அதிக அளவு நிறைந்துள்ளது.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.