செங்கல்பட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
மண்ணிவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்த நிலையில், டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த பள்ளி வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில் மண்ணிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடுகளை சாலையில் விட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.