தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ராமதுரை(52). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ராமதுரை குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையடைந்து தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமதுரையை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு ராமதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ராமதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.