வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை எனவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக, கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா என்ற பகுதியில் ரயில் நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவரால் சுடப்பட்டதில் அபே சரிந்து விழுந்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் ஷின்சோ அபே அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் கடும் முயற்சி செய்தும், ஷின்சோ அபே உயிர் பிரிந்தது.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 41 வயது மதிக்கத்தக்க நபரை, சம்பவ இடத்தில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கையினால் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடந்த விசாரணையில், ஷின்சோ அபே மீது திருப்தியில்லை. இதனால், அவரை கொலை செய்ய விரும்பினேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக ஜப்பான் நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நபர், ஜப்பான் கடற்படையில் பணிபுரிந்தவர் எனவும், அவரது பெயர் டெட்சுயா யமகாமி எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement