உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிகப்பட்டதை அடுத்து ரசிகர்கள், திரைப்பிரபலங்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
அதன்படிம் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோ மூலம் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வீட்டுக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் விளக்கமளித்துள்ளார். அதில், விக்ரமிற்கு மாரடைப்பு என பரவி வரும் செய்து பொய்யானது. அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தேவை இல்லாமல் அவரது குடும்பத்தாருக்கு வேதனையை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விக்ரம் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.