புதுச்சேரி: புதுச்சேரியில் செயலி மூலம் ரூ.1 கோடி மோசடி செய்து பணம் பிரித்த விவகாரத்தில் நைஜீரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. செயலிகளை நம்பி முன்பின் தெரியாதவர்களுக்கு இ-மெயில் முகவரி, பணம் உள்ளிட்டவைகளை அனுப்பக்கூடாது என சைபர் கிரைம் அறிவுறுத்தியது.