ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுடப்பட்டது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வேதனை தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.
Photo: Reuters/Chris Wattie
இதுதொடர்பாக அவரது பதிவில், ‘ஷின்சோ அபே மீதான கொடூரமான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சிறந்த பிரதமரின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்காக எனது மனம் வருந்துகிறது. அதே சமயம் ஜப்பானிய மக்களுடன் இணைந்து பிரான்ஸ் நிற்கிறது’ என தெரிவித்துள்ளார்.
Profondément choqué par l’attaque odieuse dont Shinzo Abe a été victime. Pensées à la famille et aux proches d’un grand Premier ministre. La France se tient aux côtés du peuple japonais.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 8, 2022
ASSOCIATED PRESS