100 கோடீஸ்வரர்களை உருவாக்கும் இட்லி மாவு நிறுவனம்.. அடேங்கப்பா..!

இந்திய மக்களின் வேகமான வாழ்க்கை முறையில் சமைப்பதை மிகவும் எளிதாக்கப் பல நிறுவனங்கள் ரெடிமேட் உணவுகளை வைத்திருந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே வெற்றி பெறுகிறது.

அப்படி இந்தியா முழுவதும் வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வரும் iD Fresh முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா..!!

இந்த அறிவிப்பு மூலம் iD Fresh நிறுவனம் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.

iD Fresh நிறுவனம்

iD Fresh நிறுவனம்

iD Fresh நிறுவனம் அடுத்தடுத்து முதலீட்டைத் திரட்டி தனது உற்பத்தி அளவுகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல் தனது வர்த்தகத்தை வெளிநாட்டுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் iD Fresh நிறுவனத்தின் காலாண்டு மற்றும் வருடாந்திர வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ESOP திட்டம்

ESOP திட்டம்

இந்நிலையில் நிர்வாகத்தை வலிமையான கட்டமைப்பாக மாற்றும் நோக்கத்துடன் 7வது முறையாக முக்கியமான மற்றும் திறமையான ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை அளிக்கும் ESOP திட்டத்தை அறிவித்துள்ளது iD Fresh நிறுவனம்.

27 ஊழியர்களுக்கு ஜாக்பாட்
 

27 ஊழியர்களுக்கு ஜாக்பாட்

இந்த 7வது முறை ESOP திட்டத்தில் சுமார் 27 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகள் அளிக்கப்பட்டு உள்ளது, ஒரு நிறுவனத்தில் ஊழியர் ESOP திட்டத்தின் வாயிலாகப் பங்குகளை வாங்குவது என்பது சாதாரணக் காரியமில்லை.

 300 கோடி ரூபாய்

300 கோடி ரூபாய்

நிர்வாகம் ஊழியரின் பணி அல்லது திறன் மிகவும் அவசியம், கட்டாயம் என்று உணர்ந்தால் தான் இத்தகைய பங்குகளை அளிக்கும். iD Fresh நிறுவனம் 2016 முதல் செயல்படுத்தி வரும் இந்த ESOP திட்டம் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊழியர்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

 டிரைவர் மற்றும் ஹெல்பர்

டிரைவர் மற்றும் ஹெல்பர்

அதிலும் முக்கியமாக iD Fresh நிறுவனம் இந்த ESOP திட்டத்தை ஆரம்பக்கட்ட ஊழியர்களுக்கு அதிகளவில் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் புதிய முயற்சியாக ஒரு டிரைவர் மற்றும் ஹெல்பர்-க்கு ESOP பங்குகளைக் கொடுத்துள்ளது.

2000 ஊழியர்கள்

2000 ஊழியர்கள்

iD Fresh நிறுவனத்தில் சுமார் 2000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் அடுத்த 3 வருடத்தில் ESOP திட்டத்தின் வாயிலாக 100 கோடீஸ்வரர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கியமான இலக்கு என இந்நிறுவனத் தலைவர் பிசி முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 பெங்களூர்

பெங்களூர்

2005ஆம் ஆண்டுப் பிசி முஸ்தபா தனது 5 சகோதரர்கள் உடன் இணைந்து பெங்களூரில் குட்டி கடையில் இட்லி மற்றும் தோசை மாவு தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தைத் துவங்கினார், இன்று 2000 ஊழியர்களுடன் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: id fresh esop employee pc musthafa

English summary

Idly, Dosa batter company iD Fresh aims to create 100 crorepatis in 3 years says PC Musthafa

Idly, Dosa batter company iD Fresh aims to create 100 crorepatis in 3 years says PC Musthafa 100 கோடீஸ்வரர்களை உருவாக்கும் இட்லி மாவு நிறுவனம்.. அடேங்கப்பா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.