ஆந்திராவில், அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த பைக் அரசு பேருந்து மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அகதிரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், அரசு பேருந்து மீது மோதியது.
அதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.