கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தனியார் பள்ளியின் தாளாளர் ”காவேரி” யுவராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு, 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தது.
அதில், மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவிக்கு பள்ளியின் தாளாளர் யுவராஜும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.