கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை செய்ததில் கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நல்லூசாமி(46) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 530 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர், மோகன் நகர் பாலத்துக்கு அடியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரவீன்(21) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 1/4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் கவுண்டம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(22) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.