நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா? ரூ.99 ரீசார்ஜ் செய்யுமுன் இதை கவனியுங்கள்!

இந்திய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.99 பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

வெறும் இன்கம்மிங் வசதிக்காக மட்டும் வைத்துக் கொள்பவர்கள் இந்த குறைந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த பிளானில் தற்போது சத்தமே இல்லாமல் கால் கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!

ஏர்டெல்

ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நெட்வொர்க்கை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவ்வப்போது ஏர்டெல் தனது கட்டணங்களை மாற்றி அமைத்து வரும் நிலையில் சமீபத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளான் ரூபாய் 99 என அறிமுகப்படுத்தியது.

குறைந்தபட்ச ரீசார்ஜ்

குறைந்தபட்ச ரீசார்ஜ்

ஏர்டெல் உள்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம்களும் குறைந்தபட்சமாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வசதிகளை பெற முடியும் வசதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நடைமுறை அமலுக்கு வந்த போது அனைத்து நிறுவனங்களும் அதைப் பின்பற்றின.

ரூ.99 பிளான்
 

ரூ.99 பிளான்

ஆரம்பத்தில் ஏர்டெல்லில் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.35 இருந்தால் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் பெற்றுக் கொள்ளலாம் என்ற முறை இருந்தது. ஆனால் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.99 தான் குறைந்தபட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 நாட்கள் வேலிடிட்டி

28 நாட்கள் வேலிடிட்டி

இந்த நிலையில் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி என்றும் 99 ரூபாய் டாக்டைம் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு வினாடிக்கு ஒரு பைசா மட்டுமே அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணமாக பிடித்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கால் கட்டணம் உயர்வு

கால் கட்டணம் உயர்வு

ஆனால் இதில் தற்போது சத்தமே இல்லாமல் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூன் மாதத்தின் கடைசியில் இருந்து ஏர்டெல் 99 ரூபாய் திட்டத்தில் ஒரு வினாடிக்கு 2.5 பைசா என அவுட்கோயிங் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரூ.99 ரீசார்ஜ் செய்தவர்களின் பேலன்ஸ் சில நாட்களில் காலியாகிவிடும். எனவே ரூ.99 பிளானை ரீசாஜ் செய்யும்போது அவுட்கோயிங் கால்கட்டணம் ஒரு வினாடிக்கு 2.5 பைசா கால் கட்டணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மற்ற பிளான்கள்

மற்ற பிளான்கள்

மேலும் ஏர்டெல் நிறுவனம் ரூ.109, ரூ.111, ரூ.128 மற்றும் ரூ.131 ஆகிய அடிப்படை பிளான்களையும் கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தும் ஒரு மாத வேலிடிட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airtel 99 rupees prepaid plan call tariff cost changed quietly

Airtel 99 rupees prepaid plan call tariff cost changed quietly | நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா? ரூ.99 ரீசார்ஜ் செய்யுமுன் இதை கவனியுங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.