திருப்பத்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மேல் அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி அனுமந்தன்(55). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வெலக்கல் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அனுமந்தன் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அனுமந்தன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அனுமந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்