வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க விவோ நிறுவனம் செய்த செயல்.. அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை

இந்தியாவில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி பணத்தை கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்தில் இருந்து 465 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 48 இடங்களிலும், அதை சார்ந்த நிறுவனங்களின் தொடர்புடைய 23 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
Vivo இன் முன்னாள் இயக்குனர் பின் லூ, 2018 இல் இந்தியாவை விட்டு வெளியேறினார், இப்போது அதன் ஸ்கேனரில் உள்ள பல நிறுவனங்களை இணைத்துக்கொண்டார்.
இதில், 119 வங்கிக் கணக்குகளில் இருந்த 465 கோடி ரூபாயையும், 73 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 கிலோ தங்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சீனாவுக்கு தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி பணத்தை கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.