150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக வீடுகள் தோறும் தி.மு.க அரசு அனுப்பியிருக்கும் நோட்டீஸ் சொத்து வரி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், தி.மு.க ஆட்சி இனி செய்யப் போகிற கொடுங்கோன்மைகளுக்கான எச்சரிக்கை மணியோ! என மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால்தான் முதலமைச்சர் திரு.ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது”
என்று அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 8, 2022