முயல் குட்டிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கோழிக் குஞ்சு… 25 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical Illusion game: இந்த ஆப்டிகல்இல்யூஷன் படம் ஈஸ்டரை அடிப்படையாகக் கொண்டது, மிகவும் அழகானது. மிகவும் சுவாரசியமான இந்த புதிரில் பிஸியாக இருக்கும் முயல் குட்ட்டிகளுக்கு இடையே ஒரு கோழிக்குஞ்சு மறைந்திருக்கிறது. அதை 25 நொடிகளுக்கு கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளி போல இணையத்தை சுழற்றி அடித்து வருகிறது. ஒரு காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும் இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக விலங்குகளைக் கண்டுபிடியுங்கள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள், என்று சவால் விடும் படங்கள் எல்லாமே உங்களை வைக்கோல் போரில் ஊசியைத் தேடச் சொல்கிற கதைதான். எப்படி தேடுவது என்று மலைத்துப்போனால், நிச்சயமாக கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் ஸ்மார்ட்டாக உன்னிப்பாகத் தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரபல ஹங்கேரி ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் வரைந்தது. ஈஸ்டர் பண்டிகையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் பிஸியாக இருக்கும் முயல் குட்டிகளுக்கு இடையே, ஒரு கோழிக்குஞ்சு மறைந்திருக்கிறது. அதை 25 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

மறைந்திருக்கும் கோழிக்குஞ்சுவைக் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.

அந்த கோழிக்குஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் உற்றுப் பார்த்து தேடுங்கள். கண்டுபிடித்துவிட்டால் நல்லது. இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மேலும் ஒரு குறிப்பு தருகிறோம். அந்த கோழிக்குஞ்சு மஞ்சள் நிற பூக்கள் போல, படத்தின் இடது பக்கத்தின் மத்தியில் இருக்கிறது. இப்போது மிகவும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் பாருங்கள்.

இதற்கு பிறகும், உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை விடையைத் தருகிறோம்.நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து உங்கள் மூளைக்கு பயிற்சி அளியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.