இந்திய வம்சாவளியினை சேர்ந்த அமெரிக்கரான கீதா கோபிநாத்தினை பலரும் அறிந்திருக்கலாம். இவர் கடந்த 2019 முதல் நடப்பு ஆண்டு தொடக்கம் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்தவர்.
இதுவே பெருமை அளிக்கும் விஷயமாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பதவியேற்ற பெண் என்ற வகையில், அவரின் புகைப்படமானது, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அம்பானி, அதானிக்கு போட்டியாக களமிறங்கும் டாடா.. இனி ஆட்டம் வேற லெவல்!
சிங்கப்பெண்
இதில் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம் என்னவெனில் சுற்றிலும் ஆண்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் இடத்தில், தனி ஒரு சிங்கப்பெண்ணாக இடம் பெற்றிருக்கிறது கீதா கோபி நாத்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீதா கோபி நாத், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் 11 படத்துடன், தனது படமும் இடம்பெற்றுள்ளதை மிக நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
பெண் சமூதாயத்திற்கே பெருமை
அதில் மொத்தம் 11 படங்களில் கடைசியாக தனி ஒரு பெண்ணாக கீதா இடம்பெற்றுள்ளார். இது இந்தியாவுக்கு மட்டும் என்பதோடு, ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கு பெரும் சேர்க்கும் விதமாக உள்ளது.
முதல் இந்தியர்
கீதா கோபி நாத்துக்கு முன்னதாக முதல் இந்தியராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த போட்டோவில் இடம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2003 – 2006ம் காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்தவர்.
எனினும் தனி ஒரு பெண்ணாக இத்துறையில் வெற்றிகரமாக கோலேச்சிய கீதா, இரண்டாவது இந்தியா வம்சாவளியினை சேர்ந்தவராக இடம்பெற்றுள்ளார். நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர் தான்.
ஆய்வறிக்கைகள்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அவரின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு துணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு விதமான பொருளாதார ஆய்வுகளை வெளியிட்டு வந்த கீதா, கிரிப்டோகரன்சி, இந்திய பொருளாதாரம் குறித்தும் அடிக்கடி விவரித்தும் வந்தார்.
யார் இந்த கீதா?
கீதா கோபிநாத் தனது இளங்கலை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார், பின்னர் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றவர். கேரளாவினை பூர்விகமாக கொண்டவர் கீதா,
indian origin Gita Gopinath is 1st woman to join IMF’s wall of former Chief Economists
indian origin Gita Gopinath is 1st woman to join IMF’s wall of former Chief Economists/இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த சிங்கப் பெண்.. யார் இந்த கீதா கோபிநாத்?