சென்னை: மதுரையில் 66 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இதன்படி கீழக்கரை மற்றும் சின்ன இலந்தை குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது.
தற்போது கீழக்கரை இறுதி செய்யப்பட்டு அங்கு ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. இந்த பணியை தமிழ்நாடு சுற்றலா துறை மேற்கொள்ள உள்ளது. பல்வேறு அம்சங்களுடன் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ளது. இதன் முழு விவரம்:
- மதுரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலையில் இந்த மைதானம் அமைய உள்ளது.
- ஜல்லிக் கட்டு மைதானத்தின் மொத்த பரப்பளவு 66 ஏக்கர்
- இந்த 66 ஏக்கருக்கும் மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது.
- பல்நோக்கு அரங்க வடிவமைப்பில் இந்த மைதானம் இருக்கும்.
- அனைத்து விதமான பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தும் வகையில் இது இருக்கும்.
- சாகச விளையாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்படும்.
- மைதானத்தை சுற்றி பல்நோக்கு கண்காட்சி அரங்கம் அமைய உள்ளது.
- ஜல்லிக்கட்சி தொடர்பான அருங்காட்சியம் தனியாக அமைக்கப்படும்.
- விருந்து நடத்த, உணவு அருந்த தனித் தனி இடங்கள் இந்தத் திட்டத்தில் இருக்கும்.
- கைவினைப் பொருட்கள் மையமும் இந்த மைதானத்தை சுற்றி அமைக்கப்படும்
இவ்வாறு பல்வேறு வசதிகளுடன் கூட ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான மாஸ்ட்ர் பிளான் 4 மாதங்களில் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.