தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. சன் டி.வி.யின் சீரியல் நிறைவு பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிக்க தவறுவதில்லை. அந்த வகையில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துள்ள சீரியல்களில் ஒன்று நாயகி.
வித்யா பிரதீப், திலிப் ராயன், மீரா கிருஷ்ணன், அம்பிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான ஆனந்தி கேரக்டரில் முதலில் விஜயலட்சுமி நடித்து வந்தார். ஆனால் சில எபிசோடுகள் கடந்த உடன் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் ஆனந்தி கேரக்டரில் நடித்து வந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் லாக்டவுன் காலத்தில் சில நாட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு மீண்டும் ஒளிபரப்பான போது நட்சத்திரா நாகேஷ், மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டு சீரியலின் கதையே வேறு கோணத்திற்கு மாற்றி ஒளிபரப்பானர். அதன்பிறகு சில நாட்களில் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் லாக்டவுனுக்கு முந்தைய நாயகியை ரசிகர்கள் யாரும் இதுவரை மறக்கவில்லை என்றே சொல்லாம். இந்நிலையில், இந்த சீரியலில் முன்னணி கேரக்டரில் நடித்த வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன், சுஷ்மா நாயர், மற்றும் மெர்ஸி லேயாள் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இவர்கள் 4 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை மீரா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், டான் படத்தில் வரும் சூரி – சிவகார்த்திகேயன் காமெடி சீனை டப்ஸ்மாஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நாயகி சீரியலை மிஸ் செய்வதாகவும், மீண்டும் இவர்கள் அனைவரும் இணைந்து புதிய சீரியலில் நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“