நம்மால் கோடீஸ்வரராக ஆக முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, நம்முடைய குழந்தைகளாவது கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.
ஒருவர் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பதற்கு மிக எளிய வழி சிறுவயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்பதுதான்.
அந்த வகையில் உங்கள் குழந்தைகள் பெயரில் சிறு வயதிலேயே நாம் சேமித்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் போது எந்தவித பணியும் செய்யாமல் அவர்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். அது எப்படி என்பது தற்போது பார்ப்போம்.
சேமிப்பு
சேமிப்பு என்பது பல்வேறு வகைகளில் இருந்தாலும் அதில் சில ஸ்மார்ட் சேமிப்புதான் நல்ல பலன்களைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொருளாதார நிபுணர்களின் கூற்று படி மியூச்சுவல் ஃபண்டுகள் தான் உங்கள் குழந்தையை எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் கோடீஸ்வரராக ஆக்குவதற்கான எளிய வழி என்று கூறி வருகின்றனர்.
எஸ்.ஐ.பி
ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக எஸ்.ஐ.பி முறையில் அதாவது சிஸ்ட்மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் முறையில் ஒரு சிறிய தொகையை குழந்தையாக இருக்கும்போதே முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் நீண்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து முதலீடு செய்தால் அந்தத் தொகை கண்டிப்பாக உங்கள் குழந்தை பெரியவராக வளரும் போது கோடியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் சேமிப்பு
உங்கள் குழந்தையின் பெயரில் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சேமிக்கவேண்டும். மிகவும் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை .ஆனால் தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்பதுதான் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள முக்கிய அம்சம்.
ரூ.6000
உங்கள் குழந்தை கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் நீங்கள் தினமும் வெறும் 200 ரூபாய் சேமித்தாலே போதும். அதாவது மாதம் ரூபாய் 6 ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் சேமித்தால் போதும். 25 வருடங்கள் கழித்து உங்கள் குழந்தையின் பெயரில் உள்ள பணம் கோடியை நெருங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வருடங்கள்
ஒவ்வொரு மாதமும் உங்கள் குழந்தையின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் 6,000 ரூபாயை நீங்கள் 25 வருடங்கள் தொடர்ந்து சேமித்தால் நீங்கள் முதலீட்டு செய்த தொகை சுமார் 18 லட்சமாக இருக்கும். இந்த தொகைக்கு ஆண்டுக்கு 12% வருமானம் பெற்றாலும் 25 வருடத்திற்கு 95.85 லட்சமாக வட்டியாக கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்த 18 லட்சத்தையும் சேர்த்தால் உங்கள் குழந்தையின் பெயரில் இருக்கும் மொத்த தொகை ரூ 1.13 கோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் – கல்வி
எனவே உங்கள் மகன் அல்லது மகளுக்கு 25 வயதில் நீங்கள் ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்க வேண்டும் என்றால் அந்த குழந்தையின் பெயரில் மாதம் 6000 ரூபாய் சேமிக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த பணம் அந்த குழந்தையின் திருமணம் அல்லது கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரூ.2 கோடி
ஒருவேளை நீங்கள் 25 ஆண்டுக்கு சேமிக்கும் தொகைக்கு 12% வட்டிக்கு பதிலாக 15% வட்டி பெற்றால் 25 ஆண்டுகளில் அந்த தொகை முதலீடு மற்றும் வட்டி தொகையுடன் சேர்ந்து சுமார் 2 கோடி வரை கிடைக்கும். அதாவது 1.97 கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால சேமிப்பு
இன்று முதலீடு செய்து நாளை உடனே எடுக்கும் சேமிப்பு அல்ல மியூச்சுவல் பண்ட். நீண்ட கால சேமிப்பினால் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் மிகப்பெரிய லாபத்தை அடையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் குழந்தை கோடிஸ்வரர் ஆக வேண்டும் என முடிவு செய்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டால் அந்த முதலீட்டை நீங்கள் எந்தவித கணக்கு பார்க்காமல் தொடர்ந்து சேமித்து கொண்டே இருக்க வேண்டும்.
கவனம் தேவை
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் தொகை மிகப்பெரிய தொகை என்பதால் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பதை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து நீண்ட கால முதலீட்டிற்கு எந்த நிறுவனம் சரியாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து கவனமாக தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.
ஏற்ற இறக்கம்
அவ்வாறு நல்ல நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டால் அதிலுள்ள ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்ளவே கூடாது. அந்த முதலீடு கண்டிப்பாக உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் என்ற நம்பிக்கையில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
What you do if your child will become a millionaire without doing anything?
What you do if your child will become a millionaire without doing anything? | உங்கள் குழந்தைகள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்றுதான்!