அஸ்வினுக்கு ஒரு நீதி, கோலிக்கு ஒரு நீதியா? கபில்தேவ் கேள்வி

Kapil Dev Tamil News: கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இவர் இந்திய கிரிக்கெட் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கபில் தேவ் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடும் லெவனியில் இருந்து கழற்றி விடும் போது, தனது நீண்ட கால மோசமான பேட்டிங்கிற்கு பிறகு விராட் கோலியையும் டி20 போட்டிகளில் கழற்றி விட வேண்டியது தானே? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் கோலி சதமடித்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ஆகியுள்ள நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்காவிட்டால், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கபில் தேவ் கருதுகிறார்.

சமீபத்தில் ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு கபில் தேவ் அளித்துள்ள பேட்டியில், “ஆமாம், இப்போது நீங்கள் டி20 ஆடும் லெவனியில் இருந்து கோலியை பெஞ்ச்சில் அமர வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளர் அஷ்வினை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கினால் (ஒரு காலத்தில்) உலகின் நம்பர் 1 பேட்டரையும் அணியில் இருந்து நீக்கலாம்.

பல ஆண்டுகளாக விராட் செய்ததை நாங்கள் பார்த்த அளவில் பேட்டிங் செய்யவில்லை. அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் பெயர் பெற்றார், ஆனால் அவர் செயல்படவில்லை என்றால், நீங்கள் செயல்படும் இளைஞர்களை அணியிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

இந்த இளைஞர்கள் முயற்சி செய்து விராட்டை விஞ்ச வேண்டும் என்ற நேர்மறையான அர்த்தத்தில் அணியில் இடங்களுக்கான போட்டியை நான் விரும்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் கோலிக்கு “ஓய்வு” அளிக்கப்பட்டால், அது அவரை அணியில் இருந்து கழற்றி விட்டதாக கருதப்படும்.

நீங்கள் அதை ஓய்வு என்று அழைக்கலாம், ஆனால், பலர் அதை கழற்றி விட்டது என்றே அழைப்பார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பார்வைக்கு ஏற்ப வேறுபடும். வெளிப்படையாக, தேர்வாளர்கள் அவரை (கோலி) தேர்வு செய்யவில்லை என்றால், அது ஒரு பெரிய வீரர் சிறப்பாக செயல்படாததால் இருக்கலாம்.

உங்களுக்கு நிறைய விருப்பங்கள் இருக்கும்போது ஃபார்மில் இருக்கும் பிளேயர்களை வைத்து விளையாடுங்கள். நீங்கள் நற்பெயரைக் கொண்டு செல்ல முடியாது, ஆனால் நீங்கள் தற்போதைய ஃபார்மை தேட வேண்டும். நீங்கள் ஒரு நிலையான வீரராக இருக்கலாம், ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அர்த்தமில்லை.” என்று கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.