வாஷிங்டன்: டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக, டெஸ்லா நிறுவனரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து, போலி கணக்குகள் குறித்து தகவல் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கை: போலி கணக்குகள் குறித்து கேட்ட தகவல்களை தராததாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டுவிட்டர் தலைவர் பிரட் டெய்லர், டுவிட்டர் வாரியம், எலான் மஸ்க்குடன் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர திட்டமிட்டுள்ளோம். அதில் வெற்றி பெறுவோம் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement