பரமக்குடி அரசு மருத்துவமனை கழிப்பறையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுமார் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தலைமை மருத்துவர் முத்தரசனிடம் இந்த தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை மருத்துவர், சோதனை செய்து பார்த்ததில் ஆண் சிசு இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனையில் தங்கியிருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளிடம் விசாரணை செய்ததில் யாருடைய குழந்தை என்பது தெரியவில்லை இந்நிலையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் தலைமை மருத்துவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிப்பறையில் சிசு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM