ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று படுகொலை செய்யப்பட்டார். அவரது அகால மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அபேவின் கொள்கைகள் பிடிக்காததால் அவரை கொலை செய்ததாகக் கூறிய இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். ஜப்பானில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இது போன்ற அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன.
1914 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டது தான் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. ஆண்டுகள் கடந்தோடினாலும் அரசியல் படுகொலைகள் அதிகாரம், பதவி, வெறுப்பு, போட்டி என ஏதாவது ஒரு காரணத்துக்காக நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி இந்த நூற்றாண்டில் இதுபோன்று நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் ஏராளம். அவற்றின் சிறு தொகுப்பு:
அக்டோபர் 5 2021: பிரிட்டர் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவர் வாக்கு சேகரிப்பில் இருந்த போது இந்தப் படுகொலை நடந்தது.
ஜூலை 7, 2021: ஹைதி நடடின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அவரது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி படுகாயமடைந்தார்.
ஏப்ரல் 20, 2021: சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொல்லப்பட்டார்.
டிசம்பர் 19, 2016: துருக்க்கி நாட்டுக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரே கார்லோவ் துருக்கி போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிரியாவில் ரஷ்யா படைகள் இருப்பதை எதிர்த்து அவர் இந்தக் கொலையை செய்ததாகக் கூறினார்.
ஜூன் 16, 2016: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் வலது சாரி ஆதரவாளர் ஒருவரால் கொல்லப்பட்டார்.
பிப் 6, 2013: டுனீசியா நாட்டு இடது சாரி எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலெய்ட் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 11, 2012: அமெரிக்க தூதர் கிறிஸ் ஸ்டீவன்ஸ் லிபியாவில் கிளர்ச்சியாளர்களால் கொலை செய்யப்பட்டார்.
அக்டோபர் 20, 2011: லிபிய நாட்டின் நீண்ட கால சர்வாதிகார தலைவராக இருந்த மோமர் கடாஃபி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
மார்ச் 2, 2009: கினியா பிசாவு நாட்டின் அதிபர் ஜோ பெர்னாடோ வியரா அவரது மாளிகையிலேயே அதிருப்தி ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டார்.
டிசம்பர் 27, 2007: பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிப் 14, 2005: லெபனான் பிரதமர் ரஃபீக் ஹரிரி தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் 21 பேர் இறந்தனர். 226 பேர் காயமடைந்தனர்.
டிசம்பர் 29, 2003: ஆர்ச்பிஷப் மைக்கேல் கோர்ட்னி, புருண்டி நாட்டில் கொல்லப்பட்டார்.
மார்ச் 12, 2003: செர்பிய பிரதமர் ஜோரன் ஜின்ஜிக் கொல்லப்பட்டார்.
மே 6, 2002: டச் அரசியல்வாதி பிம் பார்சுன் தேர்தலுக்கு முந்தைய நாளில் கொல்லப்பட்டார்.
ஜூன் 1 2001: நேபாள் நாட்டின் அரசர் பீரேந்திரா அவரது மகனும் இளவரசருமான தீபேந்திராவால் கொல்லப்படார். அவருடன் ராணி ஐஸ்வர்யா, இன்னொரு இளவரசர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 18, 2001: காங்கோ நாட்டின் அதிபர் லாரண்ட் கபிலா அவரது மெய்க்காப்பாளர்களாலேயே கொல்லப்பட்டார்.