சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் பேட்டியளித்தார்.