சென்னை: மழைநீர் வடிகால் பணி நடைபெற உள்ளதால் சென்னை கத்திபாரா மேம்பாலாம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி சாலையில், ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையிறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் 9 மற்றும்10 ஆம் தேதி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜி.எஸ்.டி சாலைக்கு விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க. தொழில் பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.
பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதும் இன்றி வழக்கமான சாலையில் (கத்திபாரா வழியாக) செல்லலாம்.
வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க. தொழில் பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.