40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தைக் கொண்ட கப்பல் இன்று (09) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் கிடைத்துள்ள இந்த உரம் ,கப்பலில் இருந்து இறக்கப்பட்ட பின்னர், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரினால் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இலங்கையில் உள்ள ஆய்வுகூடங்களிலும் யூரியா உரம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இன்று (09) மாலையில் இருந்து உரத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.