700 பேர் திடீர் பணிநீக்கம், சம்பள உயர்வு கட்.. ஓலா முடிவால் ஊழியர்கள் கண்ணீர்..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை மற்றும் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா கடந்த வாரங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.

தற்போது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பல முக்கியமான நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

500 பேரை பணிநீக்கம் செய்ய முடிவா..? ஓலா ஊழியர்களின் நிலைமை என்ன..?

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் டாக்சி சேவையைத் தாண்டி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் இருந்து புதிய முதலீடுகள் பெற முடியாத சூழ்நிலை இருக்கும் காரணத்தாலும், சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய வர்த்தகங்கள் அடுத்தடுத்து மூட வேண்டிய இக்காட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா.

சம்பள உயர்வு கட்

சம்பள உயர்வு கட்

இதன் எதிரொலியாக ஓலா நிறுவனம் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை அளிக்கப்போவது இல்லை என்று தனது ஊழியர்களிடம் அறிவித்துள்ளது, இதேபோல் பல நூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் சிலிப் அதாவது பணிநீக்க ஆணையைக் கொடுத்துள்ளது.

பணிநீக்கம்
 

பணிநீக்கம்

ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் ஓலா நிறுவனம் அனைத்து வர்த்தகப் பிரிவுகளில் இருந்தும் பல அடுக்குகளில் இருந்தும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் 400 முதல் 500 ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 700 வரையில் உயரலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீடுகள் வரவில்லை

முதலீடுகள் வரவில்லை

சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார மந்த நிலை காரணமாகவும், வட்டி விகித உயர்வின் காரணமாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைப் பெரிய அளவில் குறைத்தனர். இதனால் போதிய முதலீடுகள் இல்லாமல் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் மாட்டிக்கொண்டது.

ஏப்ரல் பணிநீக்கம்

ஏப்ரல் பணிநீக்கம்

இதன் எதிரொலியாக ஓலா நிறுவனம் ஏப்ரல் மாதமும் அதிகப்படியான ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து தான் நாட்டில் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

ஓலா ஊழியர்கள்

ஓலா ஊழியர்கள்

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களிலும் பல வார தாமதத்திற்குப் பின்பு சம்பள உயர்வைக் கொடுத்துள்ள வேளையில், ஓலா நிறுவனத்தில் ஜூலை 6ஆம் தேதி ஊழியர்கள் மத்தியில் அப்ரைசல் பற்றிய கேள்விகள் அதிகரிக்கத் துவங்கியதால் இந்நிறுவனத்தின் ஹெச்ஆர் அதிகாரி பாலசந்தர் விளக்கம் கொடுத்துள்ளார்.

3 உயர் அதிகாரிகள் ராஜினாமா

3 உயர் அதிகாரிகள் ராஜினாமா

இந்த 2 வாரத்தில் மட்டும் 3 உயர் அதிகாரிகள் ஓலா நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதில் நேற்று ஓலா ஏஎன்ஐ டெக்னாலஜி நிறுவனத்தின் Talent Acquisition பிரிவின் மூத்த இயக்குனர் ஷிகர் எஸ் சூட் வெளியேறுவதாக அறிவித்தார்.

மூத்த இயக்குனர்

மூத்த இயக்குனர்

கடந்த வாரம், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மூத்த இயக்குனர் யஷ்வந்த் குமார், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் HR இயக்குநர் ரஞ்சித் கொண்டேஷன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola: Layoff employees, cuts appraisal for a year; bhavish aggarwal bold steps to save company

Ola: Layoff employees, cuts appraisal for a year; bhavish aggarwal bold steps to save company 700 பேர் திடீர் பணிநீக்கம், சம்பள உயர்வு கட்.. ஓலா முடிவால் ஊழியர்கள் கண்ணீர்..!

Story first published: Saturday, July 9, 2022, 11:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.