இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரான பகவந்த் சிங் மான், குர்ப்ரீத் கௌர் என்ற இளம் மருத்துவரை வியாழக்கிழமையன்று திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், பஞ்சப் முதல்வருக்கு கனேடிய தூதரக அதிகாரியான Patrick Hebert தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரான பகவந்த் சிங் மான் மற்றும் Dr. குர்ப்ரீத் கௌர்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ மனதார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பகவந்த் சிங் மான்னுக்கு இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே இந்தர் ப்ரீத் கௌர் என்ற பெண்ணுடன் திருமணமாகி 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு தன் மனைவியைப் பிரிந்த பகவந்த் சிங் மான், இப்போது மருத்துவரான குர்ப்ரீத் கௌரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பகவந்த் சிங் மான்னுக்கு 21 வயதில் மகள் இருக்க, அவர் தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.