இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிறது – வானிலை மையம்
இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை.!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 5 நாட்களுக்கு, பரவலாக மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்
சென்னை பெருநகரில் சாரல் மழைக்கு வாய்ப்பு.!
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்
சென்னை பெருநகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்
கடலோடும் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும்.