கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கானோர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து தப்பியோடினார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.