இலங்கையில் போராட்டக்காரர்கள் கோட்டாபய வீட்டை சுற்றி சூழந்ததால் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கோட்டபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோட்டாபய வீட்டை போராட்டக்காரர்கள் சூழந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார்.
இந்த தகவலை இலங்கையின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.