பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாகப் பதவி விலகும் நிலையில் உருவாகியுள்ளது.
பிரிட்டன் அமைச்சர் கிறிஸ் பின்சர் மூலம் துவங்கிய பிரச்சனை, மதுபானம், சரக்கு பார்ட்டி, லாக்டவுன் விதிமீறல் என அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கி 2 நாளில் 45க்கும் அதிகமான அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், வேறு வழியே இல்லாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன்-ம் தனது பதவியை ராஜினாமா செய்த ஒப்புதல் அளித்தார்.
இதேவேளையில் புதிய பிரதமர் நியமிக்கும் வரையில் இப்பதவியில் போரீஸ் ஜான்சன் இருப்பார் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் பதவிக்குத் தற்போது 6 பேர் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகின்றனர்.
ரிஷி சுனக் தான் அடுத்த பிரிட்டன் பிரதமரா..? இதுமட்டும் நடந்தால்..!!
போரீஸ் ஜான்சன்
போரீஸ் ஜான்சன் CPL கட்சி சார்பாகப் பிரதமராக இருக்கும் நிலையில், இவருடைய ராஜினாமா-வை தொடர்ந்து பிரதமராக அறிவிக்கப்படப்போவது யார் என்ற கேள்வி அந்நாட்டு மக்களைத் தாண்டி, இந்தியர்களுக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பிரதமர் போட்டியில் இருக்கும் 6 முக்கிய நபர்களில் இந்தியர்கள் இருவர் உள்ளனர்.
இந்தியா, ஈராக், பாகிஸ்தான்
தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கு 6 பேர் போட்டிப்போட்டு வரும் நிலையில் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றால் இருவர் மட்டுமே, மற்றவர்கள் இந்தியா, ஈராக், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதனாலே மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
6 பேர் யார்
ரிஷி சுனக் – இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், முன்னாள் நிதியமைச்சர்
நாதிம் ஜஹாவி – ஈராக் வம்சாவளியை சேர்ந்தவர், முன்னாள் கல்வி துறை அமைச்சர், ஜூலை 5 முதல் நிதியமைச்சர்
லிஸ் டிரஸ் – 46 வயதான இவர் 1998 முதல் தீவிர அரசியலில் உள்ளார் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்
சுயெல்லா பிரேவர்மேன் – இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவர் இங்கிலாந்து அட்டர்னி ஜெனரல்
பென் வாலஸ் – பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், தற்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர், முன்னாள் ராணுவ வீரர்
சஜித் ஜாவித் – பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர், முன்னாள் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் அமைச்சர்
ரிஷி சுனக்
சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் சவுத்தாம்ப்டனில் இந்திய வம்சாவளியே சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்குப் பிறந்தார். அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் (இன்றைய கென்யா) காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா Tanganyika-வில் பிறந்தார் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).
அவரது தாத்தா பாட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள், மேலும் 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் UK க்கு குடிபெயர்ந்தனர்.
யஷ்வீர் ஒரு பொது மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட், அவர் உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார்.
சுயெல்லா பிரேவர்மேன்
1960களில் கென்யா மற்றும் மொரிஷியஸிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி மற்றும் உமா பெர்னாண்டஸ் ஆகியோருக்குப் பிறந்தவர் சுயெல்லா பிரேவர்மேன்.
அவரது தாயார் ப்ரெண்டில் ஒரு செவிலியராகவும் கவுன்சிலராகவும் இருந்தார், மேலும் அவரது தந்தை, கோவா-வம்சாவளியைச் சேர்ந்தவர், வீட்டுவசதி சங்கத்தில் பணியாற்றினார். சுயெல்லா பிரேவர்மேன் கிரேட்டர் லண்டனில் உள்ள ஹாரோவில் பிறந்தார், வெம்ப்லியில் வளர்ந்தார்.
சஜித் ஜாவித்
சஜித் ஜாவித் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ரோச்டேல், லங்காஷயரில் பிறந்தார். இங்கிலாந்தில் குடியேறிய பாகிஸ்தானிய பஞ்சாபி பெற்றோரின் ஐந்து மகன்களில் ஒருவராக இருந்தார்.
அவரது குடும்பம் பஞ்சாப், டோபா தேக் சிங் அருகே உள்ள ராஜனா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அங்கிருந்து 1960களில் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். அவரது தந்தை பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்தார். பத்து வருடங்கள் இங்கிலாந்தில் இருக்கும் வரை அவருடைய தாய்க்கு ஆங்கிலம் தெரியாது.
இன்று மக்கள் சஜித் ஜாவித் பிரிட்டன் பிரதமர் நாற்காலிக்கு போட்டிப்போடுகிறார்.
Who is Next Britain PM: 6 contenders with two Indian-origin MP leads the race
Who is Next Britain PM: 6 contenders with two Indian-origin MP leads the race இங்கிலாந்து பிரதமர் நாற்காலி.. 2 இந்தியர்கள் போட்டி.. ஒருவருக்கு அதிக வாய்ப்பு..!