இவர் தான் உங்கள் காதலரா? ஸ்ரீதுவை நச்சரிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் 7சி என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீது நாயர். பதின் பருவத்தில் பேரழகியாக வலம் வந்த அவர், தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரைகளில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீது, தமிழில் 'கல்யாணமாம் கல்யாணம்','ஆயுத எழுத்து' ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு இதுவரை அவர் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகவில்லை. இருப்பினும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், அவர் நிகில் நாயர் என்பவருடன் கேஜிஎப் படத்தின் மெஹபூபா பாடலுக்கு ரொமாண்டிக்காக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் 'அவர் தான் உங்கள் காதலரா?' என நச்சரித்து கேள்வி கேட்டு வருகின்றனர். நிகில் நாயர் என்பவர் ஸ்ரீதுவுடன் மலையாளத்தில் 'அம்மயறியாதே' என்ற சீரியலில் ஜோடியாக நடித்திருந்தார். மற்றபடி இருவரும் காதலிக்கிறார்களா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சில ரசிகர்கள் விரும்பி கேட்க இருவரும் இணைந்து அந்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.