கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகள்… யார் டாப் தெரியுமா?

இந்தியத் திரையுலகை பொறுத்தவரை பாலிவுட்டில் தான் நடிகர் நடிகைகள் கோடிகளில் புரண்டு வருகிறார்கள் என கூறுவதுண்டு.

ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ். தெலுங்கு திரை உலகில் இருக்கும் தென்னிந்திய நடிகைகளும் கோடியில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களது படங்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர்களுடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அந்த வகையில் தென்னிந்திய திரை உலகில் உள்ள கோடீஸ்வர நடிகைகள் குறித்த பட்டியலை தற்போது பார்ப்போம்.

நடிகர் விஜய்க்கு திரைப்படங்களைத் தவிர வரும் கூடுதல் வருமானம் என்ன?

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டு Manassinakkare என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த். விஜய். அஜித். சூர்யா. தனுஷ், சிம்பு, விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள ‘மாயா’, ‘அறம்’ போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு படத்திற்கு 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கடந்த 19 ஆண்டுகளாக திரையுலகில் உள்ள இவருடைய சொத்து மதிப்பு சுமார் 165 கோடி என்று கூறப்படுகிறது.

தமன்னா

தமன்னா

கடந்த 2006ஆம் ஆண்டு ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா, அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். ‘பாகுபலி’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என சொல்லலாம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு. மலையாளம். கன்னடம். என தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் இவர் நடித்துவருகிறார். 17 ஆண்டுகளாக திரையுலகில் உள்ள இவரது சொத்து மதிப்பு சுமார் 110 கோடி என்று கூறப்படுகிறது.

அனுஷ்கா ஷெட்டி
 

அனுஷ்கா ஷெட்டி

‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் 2007ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா ஷெட்டி, பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார். இவர் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு சுமார் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிகிறது.

சமந்தா

சமந்தா

தமிழ் தெலுங்கு திரையுலகில் திருமணமான பின்னும், விவாகரத்து பெற்ற பின்னரும் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் ஒருவர்தான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமான சமந்தா, அதன் பின்னர் தமிழில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு திரைப்படத்துக்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் உள்ள இவருடைய சொத்து மதிப்பு 89 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . அதன் பின் தமிழில் அவருக்கு புதிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக உருவெடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்த இவர் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறாது. இவருடைய சொத்து மதிப்பு 50 கோடி என்றும் கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ திரைப்படம் உள்பட தற்போது 6 படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு படத்திற்கு ஒரு ரூபாய் 2 கோடி வரை சம்பளம் தரப்பட்டு வருவதாகவும், இவருடைய சொத்து மதிப்பு சுமார் 28 கோடி எனவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

More than 150 crore net.. Who is the richest south indian actress!

More than 150 crore net.. Who is the richest south indian actress! கோடிகளில் புரளும் தென்னிந்திய நடிகைகள்… யார் டாப் தெரியுமா?

Story first published: Saturday, July 9, 2022, 14:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.