கொழும்பு: இலங்கையில் வெடித்துள்ள மக்கள் கிளர்ச்சி குறித்து விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலக வேண்டும் என 16 முன்னாள் எம்.பி.க்கள் கடிதம் அளித்தனர். இலங்கையில் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியால் ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.